ஸ்ரீராம நவமி
- thungeesamacc
- Nov 30, 2022
- 1 min read

உ லகம் முழுவதும் ஸ்ரீராம பக்தர்கள் அனைவரும் ஸ்ரீராம நவமி கொண்டாடவர்கள்.
ஸ்ரீமந்நாராயணனுடைய அவதாரங்களில்,அதிமுக்கியமான அவதாரம் ஸ்ரீராமஅவதாரம். வேதத்தால் உணர்த்தப்படும் பரம்பொருளாகிய நாராயணன் இந்த அவதாரத்தில் உத்தம புருஷனான தசரத சக்கரவர்த்திக்குத் திருக்குமரனாக அவதாரம் செய்கின்றார்.
ஸ்ரீராமபிரானின் அவதார மகிமையால் அகில
லோகங்களும் சுபிட்சமடைகிறது.
ஸ்ரீராமபிரான், வேதங்களில் சொல்லப்படும் சகல புருஷார்த்தங்களும் அடைய வேண்டிய நல்ல மார்க்கத்திற்கு அருள்வழி காட்டும் ஆதர்ச
புருஷனாக விளங்குகிறார். ஸ்ரீராமபிரான் பங்குனி
மாத நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில்
அவதரித்தார். இத்தினமே ஸ்ரீராம நவமி எனக் கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்த போது, ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்தன.
ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீராமனாக அவதரிக்கப்
போகிறார் என்று தெரிந்து கொண்ட ரிஷிமார்கள்
கௌசல்யாவின் கர்ப்பவாசத்தைக் கொண்டாடினார்கள். அதுதான் கர்ப்போத்சவம்.
ஸ்ரீராமர் பிறந்ததைக் கொண்டா
டுவது ஜன்மோத்சவம்.
அஷ்டமியும், நவமியும் “மக்கள் எங்களை நல்ல தினங்களில்லை என்று ஒதுக்குகின்றனர்” என்று மகாவிஷ்ணுவிடம் சென்று கண்ணீர் விட்டன.
“உங்கள் இருவரையும் பூஜை செய்து கொண்டாடச் செய்கிறேன்” என்று
வாக்களித்தாராம் ஸ்ரீவிஷ்ணு.
அதனால்தான் ஸ்ரீராமநவமியிலும், கோகுலாஷ்டமியிலும் இரு பெரிய அவதாரங்களும் நடந்து இராமாயணமும், மகாபாரதமும் புராணப்
பொக்கிஷங்களாக மக்களுக்குக் கிடைத்தன. இராம நாமம் ஒப்பற்ற தாரக மந்திரமாக விளங்குகிறது. நமது பூர்வ ஜென்ம வினைகளுக்கு
ஏற்ப உண்டாகும் துக்கங்களிலிருந்தும்,
துயரங்களிலிருந்தும் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளும் வண்ணம் நமக்குக் கவசமாகவும் ரட்சையாகவும் அமைந்துள்ளது ராமநாமம்.
இராமன்பரமாத்மாவென்றால் அவனது நாமம் ஜீவாத்மா.
ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றுள் ஒன்று அடக்கம் என்பது
போன்று ராமனும் அவன் நாமமும் ஒன்றேதான் என்பதனையே ராம
ஜபம் நமக்கு உணர்த்துகின்றது.
ஆதிகாலம் தொட்டே
ஒவ்வொரு இனமும் பல சடங்குகளைச் செய்து வருவது
கண்கூடு. ஒரு மனிதன் தனது வாழ்வில் ஒவ்வொரு நிலையையும் கடந்து
இன்னொன்றில் புகும்போது அவனது குடும்பமும், சமுதாயமும் ஆகியவற்றுடன் அவன் கொண்டுள்ள உறவும் மாறுபடுகிறது.
இத்தகைய வேளைகளில் இப்புது நிலைகளின் சிறப்பு, பண்பு, பயன்
ஆகியவற்றை வலியுறுத்தவும், தீமையை அகற்றித் தெய்வத்தின் துணை, பாதுகாப்பு போன்றவற்றை அவன் பெறவும் பல சடங்குகள் நடத்தப்படுகின்றன. மேலும் அவன் மனத்திட்பமும், சாந்தியும்
பெறுவதற்கு இவை வழிவகுக்கும்.
சம்ஸ்காரங்கள் அந்தந்த இனத்தின் சமூக, சமய வழக்கங்களுக்கேற்ப
எண்ணிக்கையிலும், முறைகளிலும் வேறுபடும். இந்து மத சாஸ்திரங்கள் 52
சம்ஸ்காரங்களைக் கூறுகின்றன. இவற்றில் பிறப்பு, பருவமடைதல், திருமணம், இறப்பு
ஆகியவைகளே தலையானவை.
இறப்பு வாழ்வின்
Comentarios