இப்பூமியில் உங்கள் பிறப்பிற்கான ரகசியம்....
- thungeesamacc
- Jan 17, 2023
- 1 min read
நான்கு கரணங்களினல் ஒரு உயிர் இப்பூமியில் பிறப்பெடுக்கிறது என்கிறது இந்து சமயம்.

1. தார்மீக பிறப்பு :
இந்த உலகிற்கு நல்லதை செய்வதற்காக பிறப்பெடுக்கிறது. இந்தவித மனிதர்களினால் மனித குலம் சிறப்படைகிறது. இவர்கள் மக்களை நற்பாதையில் நடத்திச் செல்பவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களுக்கு உதவிகளை செய்வார்கள். சமூக நீதிக்காக குரல் கொடுப்பார்கள். சமுகத்தின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்காக பக்கப்பலமாக இருப்பார்கள்.
2. கர்ம வினைப்பிறப்பு:
முற்பிறவியில் செய்த காரியங்களை ஒட்டி, அதற்குரிய பலாபலன்களை அனுபவிப்பதற்காக எடுக்கப்படும் பிறப்பு. தங்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்காகவும், ஆத்மாவின் ஆசைகள் முழுமைப் பெறாமல் இருப்பதினாலும் இவற்றையெல்லாம் நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் இப்பிறவி அமைகிறது. கடந்த கால செயலகளுக்கேற்ப, நன்மை
செய்திருந்தால் நன்மைகளை அனுபவிப்பர். தீமை செய்திருந்தால் அதற்குரிய பலன்களை அனுபவிப்பதற்கு ஏற்றபடியான பிறவு அமைகிறது.
3. காமா பிறப்பு:
எல்லாவிதமான இன்பங்களையும் அனுபவிப்பதற்காக ஏற்படும் பிறப்பு. அவர்கள் சென்ற பிறவியில் நாம் எதையுமே அனுபவிக்கவில்லை என்ற ஏக்கத்துடன் பிறந்திருப்பார்கள். அதை நிறைவேற்றிக் கொள்ளும் வண்ணம் அவர்களின் தற்போதைய பிறவி அமைகிறது. இவர்கள் தங்களின் ஆசைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருபவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களைப் பற்றி யோசிக்க மாட்டார்கள்.ஏன் நமக்கு இந்தப் பிறவி அமைந்தது? கடவுள் இருக்கிறாரா? அவரை எப்படிக் காண்பது? என்பது போன்ற ஆன்மீகக் கேள்விகளுடனும், அதற்கான விடைதேடியலைதலுமாக இவர்களின் இப்பிறப்பு அமையும்.

இவர்கள் எல்லா உயிர்களையும் நேசிப்பவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களுக்கு தானறிந்ததைக் கற்றுத் தருவார்கள். ஞான நிலையை அடையும் மட்டும் ஓயமாட்டார்கள். இப்பிறவியில் அதை எட்டவில்லையெனினும், அடுத்தப் பிறவியில் இன்னும் அதீத தேடலுடன் பிறந்து இளம் வயதிலேயே ஞானியாக திகழ்வார்கள். இறுதியில் இறைநிலையினை அடைவார்கள்.இந்த நான்கு நிலைகளில் நீங்கள் என்னநிலையிலான பிறப்பினை இப்போது எடுதுள்ளீர்கள் என்பதை எவ்விதம் கண்டறிவது? நீங்கள் பிறந்த லக்னங்களை வைத்து நீங்கள் எந்தவிதமான பிறப்பினை எடுத்துள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
4. தார்மீக பிறப்பு
மேஷம், சிம்மம், தனுசு லக்னங்களில் பிறந்தவர்கள் தர்மீக நக்கத்திற்கக
பிறப்பெடுத்திருக்கிறார்கள்.

கர்மவினைப்பிறப்பு :
ரிஷபம், கன்னி, மகரம் லக்னங்களில் பிறந்தவர்கள் கர்மவினைப் பிறப்பினை எடுத்துள்ளவர்கள்.
காமா பிறப்பு :
மிதுனம், துலாம், கும்பம் ராசிகளில் பிறந்தவர்கள் தங்கள் விருப்பங்களை அடைவதற்கான பிறப்பினை எடுத்துள்ளார்கள்.
மோக்க்ஷா பிறப்பு :
கடகம், விருச்சிகம், மீனம் போன்ற ராசிகளில் பிறந்தவர்கள் ஆன்மீகத் தேடலில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள். இறைநிலை அடைவார்கள்.
Comentarios