top of page

இந்து மதச் சடங்குகளில் நீரின் முக்கியத்துவம்

யாக, யக்ஞ, வேள்விகள் நடைபெறும் இடங்களில கவனித்தீர்கள் என்றால்.. குருமார்கள், இறைவனை ஹோமங்களில் எழுப்பும் போது.. யாக குண்டத்திற்கு இடது புறம் புண்ணிய தீர்ததம் ஒரு பானை அல்லது பித்தனை குடத்தில் வைக்கப்பட்டிருக்கும். இதைக் கலசம் என்பார்கள்.


கலசம் பட்டு அல்லது மஞசள் நூலால் சுற்றப்பட்டிருக்கும்.வாய்ப்பகுதியில் தேங்காய் ஒன்றை வைத்து, மாவிலைகளை சொருகி வைத்திருப்பார்கள். உலகெங்கும் உள்ள இந்துக் கோயில்களில் இந்தக் காட்சியினைக் காண முடியும்.இந்த நீரினால் விக்ரங்கள் அபிஷேகம் செய்யப்படுகின்றன. அச்சமயத்தில் ரிக்வேதாவில் உள்ள நாடி ஸ்துதி மந்திரம்


உச்சரிக்கப்படுகிறது. நான், கங்கையை நமஸ்கரிக்கிறேன். யமுனை, சரஸ்வதி சுதுத்ரி ஆகிய நதிகளிலும் நீயே இருக்கிறாய்.


பர்ஸுனி, அஷ்கினி, மருத்வ்ரதா, விதாஸ்தா, அரஜிக்யா, ஓ சுஸோஷ்மா” இவையாவும் இமயமலையில் உற்பத்தியாகி ஓடிவரும் நதிகள்.


நாடி ஸ்துதி, அஹ்னிகா சூத்ரா 106 என்ற மந்திரங்களுடன் இணைந்து சொல்லப்படும்..இம்மந்திரங்கள் ஏழு நதிகள் போற்றப்படுகின்றன.” கங்கேச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி ஜலே சந்நிதிம் குரு. கங்கா, யமுனா, கோதாவரி, சரஸ்வதி நர்மாத, சிந்து, காவேரி புண்ணிய நதிகளே இந்த நீரில் எழுந்தருளி புனிதப்படுத்துங்கள்.


அனைத்து நதிகளிலும் கங்கை மிகப் புண்ணியநதியாக கருதப்படுகிறது. மா கங்கா என்றழைக்கப்படுகிறார். இவர் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்தவர். பாவங்களை தீர்ப்பவர்.



இந்துக்கள் எப்போது நீர்நிலைகளைப் பார்க்கும்போதும் ஒரு குவளையில் நீரை எடுத்து, மந்திரங்களைச் சொல்லி தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, அந்நீரை திரும்பவும் அந்த நீர்நிலைகளிலேயே விட்டு விடுவார்கள. வீடுகளிலும், கோயில்களிலும் பூஜைகளைச் செய்யும் போது, நீரினை வைத்தே முதல் சடங்கினை (ஆசமனம்) செய்கிறார்கள்.


நீர் விட்டு கைகளைச் சுத்தி செய்து மூம்முறை நீரை அருந்தி மந்திரங்களை உச்சரிப்பர். ஒவ்வொரு கோயிலிலும் நீர்நிலைகளை அமைத்திருப்பார்கள். பக்தர்கள் தங்கள் கைகால் முகங்களைக் கழுவிக் கொண்டபின்னரே கோயில்களுக்குள் பிரவேசிப்பார்க்ள.


 
 
 

Komentar


  • YouTube
  • Instagram

©2023 by Thungeesam. Proudly created with Wix.com

bottom of page