மறைந்து கொண்டிருக்கும் நம் கலாச்சாரம்
- thungeesamacc
- Jan 17, 2023
- 1 min read
மறந்து விட்டோமா? அலட்சியப்படுத்துகிறோமா?
வீட்டில் துளசி வைத்து வழிபாடு செய்வது இந்துக்களின் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. அப்போதெல்லாம் கிராமங்களிலும், நகரங்களிலும் எல்லோர் வீட்டிலும் துளசி மாடம் அமைத்திருப்பார்கள்.

காலையில துளசி மாடத்தை வலம் வந்து தூப தீபம் காட்டி துளசியை வழிபாடு செய்வது வழக்கமாக இருந்தது.

துளசி புனித தளமாகக் கருதப்படுகிறது. ஆயிரக்கணக்கான வருடங்களாக துளசி, இந்து மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்தது. துளசிச் செடி ஓஸோன் (03) ஆற்றல்மிக்க ஆக்ஸிஜனை வெளிப்படுத்துகிறது அது, சுற்றுச்சூழலின் சமநிலைக்கு உதவுகிறது என அறிவியல் அறிவித்திருக்கிறது. உலக ஓஸோன் தினம் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்நாளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் துளசிச் செடிகளை ஏராளமாக மக்களிடம் வழங்கி அதை வளர்க்கச் சொல்கின்றன.
ஆயுர்வேத கூற்றுப்படி துளசி, நம்முடைய உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. காய்ச்சலை குணப்படுத்தவும், தொண்டைப் புண்ணை குணப்படுத்தவும், மற்றும் சுவாசப்பிரச்சனைகளையும் தீர்க்கவும் பயன்படுகிறது.
எனவே இந்துக்கள் மட்டுமல்ல தற்போதைய சுற்றுச் சூழல் மாசுகளை சரிசெய்யும் பொருட்டு அனைத்து மக்களும் துளசியை வீட்டில் வளர்க்க வேண்டியது அவசியம்.
Yorumlar