விவசாயமும் பொங்கலும்
- மதிவாணண்
- Jun 13, 2022
- 3 min read
ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்தினால், எங்கிருந்தோ வரும் உணவு நிறுத்தப்படலாம். வாகனங்கள் ஓடுவதும், விமானங்கள் பறப்பதும், கப்பல் மிதப்பதும் கூட நிறுத்தப்படலாம். ஆனால் உங்களுக்கான உணவை, உற்பத்தி செய்ய நீங்கள் பழகியிருந்தால் இதையெல்லாம் எண்ணி அஞ்சவேண்டியதில்லை.
- ஐயா நம்மாழ்வார்

பொங்கல் பண்டிகை இயற்கை மற்றும், விவசாயம் தொடர்புடையது. உழவர் திருநாள், அறுவடை திருநாள், தமிழர் திருநாள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. தங்களின் பயிர்த்தொழிலுக்கு உதவும் இயற்கைக்கும்,
ஐம்பூதங்களுக்கும் நன்றி சொல்லி வணங்கும் முகமாக விவசாயிகளால் கொண்டாடப்படும் பண்டிகையே பொங்கல் பண்டிகை.
சுழலும் இந்த பூமியில் வாழும் மனிதர்கள் யாவரும், உணவுக்காக நம்பியிருப்பது விவசாயிகளைத்தான். அறிவியலாளர்களும், விண்ணில் பறக்கும் விமானிகளும், நாட்டை ஆளும் ஆட்சியாளர்களும், நீதி வழங்கும்
நீதிபதிகளும், சட்டைத்தை காக்கும் காவலர்களும், நாட்டைக் காக்கும் இராணுவ வீரர்களும், உயிர்காக்கும் மருத்துவர்களும் உணவு இல்லாவிடில் , அவர்களால் அவர்களுடைய வேலையைச் செய்ய முடியாது. அதனால்தான் ‘சுழன்றும் ஏர்பின்னதே உலகம். உழன்றும் உழவே தலை‘ என்கிறார் வள்ளுவர் பெருந்தகை.
விவசாயத் தொழிலே உலகில் உயிர் காக்கும் முக்கியத் தொழிலாக இருக்கிறது. விவசாயியின் உழைப்புதான் முதன்மைத் தொழிலாகவும்
இருக்கிறது. விவசாயி என்றால் விவசாயம் செய்பவர், பயிர்த்தொழில், வேளாண்மை செய்பவர் என்று அர்த்தம்.
தமிழகத்திலும் இதர இந்திய மாநிலங்களில் இன்று விவசாயத் தொழில் சரிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.சிறு குறு
விவசாயிகள் சொல்லொண்ணா சிரமத்திற்கு ஆளாகிறார்கள். கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்தினால், எங்கிருந்தோ வரும் உணவு
நிறுத்தப்படலாம். வாகனங்கள் ஓடுவதும், விமானங்கள் பறப்பதும், கப்பல்
மிதப்பதும் கூட நிறுத்தப்படலாம். ஆனால் உங்களுக்கான உணவை, உற்பத்தி செய்ய நீங்கள் பழகியிருந்தால் இதையெல்லாம் எண்ணி அஞ்சவேண்டியதில்லை.
- ஐயா நம்மாழ்வார்.
பொங்கல் பண்டிகை இயற்கை மற்றும், விவசாயம் தொடர்புடையது. உழவர் திருநாள், அறுவடை திருநாள், தமிழர் திருநாள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. தங்களின் பயிர்த்தொழிலுக்கு உதவும் இயற்கைக்கும்,
ஐம்பூதங்களுக்கும் நன்றி சொல்லி வணங்கும் முகமாக விவசாயிகளால் கொண்டாடப்படும் பண்டிகையே பொங்கல் பண்டிகை.

சுழலும் இந்த பூமியில் வாழும் மனிதர்கள் யாவரும், உணவுக்காக நம்பியிருப்பது விவசாயிகளைத்தான். அறிவியலாளர்களும், விண்ணில் பறக்கும் விமானிகளும், நாட்டை தமிழகத்திலும் இதர இந்திய மாநிலங்களில் இன்று விவசாயத் தொழில் சரிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.சிறு குறு விவசாயிகள் சொல்லொண்ணா சிரமத்திற்கு ஆளாகிறார்கள். கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கின்றனர். பலர் விவசாய நிலங்களை விற்றுவிட்டு எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று நகர்ப் புறங்களுக்கு குடிபெயர்கிறார்கள்.
விவசாயத்தை நம்பியிருந்த கூலித் தொழிலாளிகளும் நகர்ப்புற கடைகளில்
வேலை செய்யவும், தொழிற்சாலைகளில் பணிபுரியவும் புறப்பட்டு விட்டார்கள். விவசாயமும் விவசாயிகளும் அரசினால் புறக்கணிக்கப்படுகிறார்கள். எங்களைக் காப்பாற்றுங்கள் என்ற விவசாயியின் ஆளும் ஆட்சியாளர்களும், நீதி வழங்கும் நீதிபதிகளும், சட்டைத்தை காக்கும் காவலர்களும், நாட்டைக் காக்கும் இராணுவ வீரர்களும், உயிர்காக்கும் மருத்துவர்களும் உணவு இல்லாவிடில் , அவர்களால் அவர்களுடைய வேலையைச் செய்ய முடியாது. அதனால்தான் ‘சுழன்றும் ஏர்பின்னதே உலகம்.உழன்றும் உழவே தலை‘ என்கிறார் வள்ளுவர் பெருந்தகை.
விவசாயத் தொழிலே உலகில் உயிர் காக்கும் முக்கியத் தொழிலாக இருக்கிறது. விவசாயியின் உழைப்புதான் முதன்மைத் தொழிலாகவும்
இருக்கிறது. விவசாயி என்றால் விவசாயம் செய்பவர், பயிர்த்தொழில், வேளாண்மை செய்பவர் என்று அர்த்தம். பலவீனமான குரல் அங்கு கேட்டுக்
கொண்டேயிருக்கிறது.
இன்று பொங்கள் திருவிழாவில், 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த பொலிவும்,
மகிழ்வும் காணப்படவில்லை. ஏதோ கடமைக்குச் செய்வது போல்
கொண்டாடப்படுகிறது. பொங்கலின் தாத்பர்யம் மறைந்து போய்விட்டது. விவசாயி முகத்தில் மகிழ்ச்சியில்லை.பருவத்திற்கு மழை பெய்வதில்லை, அப்படியே சில இடங்களில் பெய்தாலும் பயிர்களை அழித்துவிடும் அளவிற்கு வெள்ளப்பெருக்கேற்பட்டு விடுகிறது.
இயற்கை அழிக்கப்பட்டு, காடுகளும் மலைகளும் காணாமல் போவதும், சுற்றுச் சூழல்களில் மாசு ஏற்படுவதும்தான் இதற்கு காரணமாக இருக்கின்றன. விவசாயிக்கு வாங்கிய கடனைக் கட்டுவதற்கு கூட விலைவதில்லை. பொதுவாக இதர தொழில்களுக்கு கொடுக்கப்படும் மதிப்பு விவசாயத்திற்கு கொடுக்கப்படுவதில்லை. விவசாயிகள் எங்கு சென்றாரும் பெரிதாய் மரியாதை இல்லை. இதுதான் உண்மை நிலை. பொங்கல் பண்டிகையைக் கூட கடன் வாங்கி கொண்டாட வேண்டியநிலை.
விவசாயிகளின் நிலை இப்படி இருக்க, விளைபயிர்களும் இரசாயன உரங்களினால், பூச்சி மருந்துகளினால் விஷமாகிக் கொண்டிருக்கின்றன. நிலங்கள் வளமையை இழந்து கொண்டிருக்கின்றன. (இவற்றைப்பற்றி
ஐயா நம்மாழ்வார் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நாம் இன்னொரு தனிக்கட்டுரையில் பார்ப்போம்)
நிலைமை இப்படி இருந்தாலும், ஐயா நம்மாழ்வர் அவர்களின் விவசாயம் பற்றிய உரைகளினால் கவரப்படும் இளைஞர்கள் பலர் தங்கள் வேலையை உதறிவிட்டு இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கியிருப்பது நம்பிக்கைக்குரிய விசயமாகும். பொங்கல் நான்கு நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா. மார்கழி இறுதி நாள் இந்திரனை வழிபாடு செய்யும் போகிப் பண்டிகையாகும். இதில் பழைய கழிதல் புதியன புகுதல் என்றதொரு மரபு அனுசரிக்கப்படுகிறது. பழைய துணிகள் வேண்டாத பொருட்கள் தீயிட்டுக் கொளுத்தப்படுகின்றன. தை முதல் நாளில் வாசலில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து வணங்கும் சூரிய வழிபாட்டில் ஆரம்பித்து, மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நிறைவுக்கு வருகிறது. காணும் பொங்கல் தினத்திலும் அல்லது வேறு தினங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடைபெற்று பொங்கலுக்கு களையூட்டுகிறது.

அறுவடை செய்த வயல் அல்லது களத்து மேட்டில் பொங்கல் வைத்து, கலப்பை முதல் கொண்டு அனைத்து வேளாண் பொருட்களையும் கழுவி, சந்தன குங்குமமிட்டு படையலிட்டு பூஜைகள் செய்து, மாடுகள் மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டி அவற்றிற்கும் பொட்டிட்டு பூச்சூட்டி, படையல் வைத்த பொங்கல் உணவினை அவைகளுக்கு ஊட்டி, குலவையிட்டு பொங்கலோ பொங்கல் என்று கூவி மகிழும் மாட்டுப் பொங்கல் நாள் இப்பொங்கல் திருவிழாவில் முக்கியமான அம்சமாகத் திகழ்கிறது. இந்த வழிபாட்டில் வயலையும், வானத்தையும், நீர்நிலையையும் (கிணறு) வழிபாடு செய்து தூப தீபாரதனைக் காட்டி வணங்குகிறார்கள் இன்று கிராமப்புறங்களில் அம்மன் கோயில்களில் பெண்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து அம்மனுக்குப் படைத்து மகிழ்கிறார்கள். காணும் பொங்கல் தினம் மஞ்சிவிரட்டு என்றும் அழைக்கப்படுகிறது. உறவினர்கள் கோயில் வழிபாட்டில் ஒன்று கூடி, ஆண்களும் பெண்களும் அவரவர்களுக்குரிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்வதும்,
சிற்றுண்டிகளை உண்டு மகிழ்வதும் இத்தினத்தின் சிறப்பாக அமைகிறது. பலவித கலை கலாச்சார நிகழ்வுகளும் பாரம்பரிய கூத்து, இசை ,நடன நிகழ்வுகளும் இத்தினத்தில் பல ஊர்களில் நடைபெறுவதை காண
இயலும். வீடுகளுக்கு வெள்ளையடித்து புதுப்பிப்பதும், புத்தாடை அணிவதும், உழவுத் தொழிலில் உதவி செய்யும் தொழிலாளர்களுக்கும் புத்தாடை மற்றும் பணம், தானியங்கள் யாவையும் அன்பளிப்பாக அளிப்பதும், புதுமணத் தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வழங்குவதும், தமிழர் திருவிழவான பொங்கல்
பண்டிகையில் நாம் காணும் சிறப்புகளாகும்.

Comments