top of page

பௌர்ணமியின் சிறப்பு


ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திதி எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ, அதுவே அந்த மாதத்தின் பெயராக உள்ளது.


பௌர்ணமி தினம் அம்மன் வழிபாட்டிற்கும் சித்தர்களின் வழிபாட்டிற்கும் உகந்த தினமாகும். அம்மன் கோயில்களில் பெண்கள் திருவிளக்கு பூஜையினை மேற்கொள்வார்கள். மகாலக்ஷ்மி ஹோமங்களும் நடைபெறும்.


சந்திரனின் ஈர்ப்புக் காரணமாக கடல் அலைகள் உயர்வதும் தாழ்வதுமாக இருக்கும். இதை லோ டைட், ஹை டைட் என்கிறார்கள்.


ஜோதிடத்தில் சந்திரன் மனோகாரகன் என்றழைக்கப்படுகிறார். இத்தினத்தில் மனதில் குழப்பங்களும் சஞ்சலங்களும் நிலவும் என்பதால்

இறைவழிபாட்டினை மேற்கொள்ளச் சொல்கிறார்கள். குறிப்பாக பௌர்ணமி தினம் பெண்களின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். எனவேதான் இத்தினத்தில் ஹோமங்களில் பெண்கள் கலந்து கொள்வதும், இறைவழிபாடு மேற்கொள்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.


அதோடு சந்திரனுக்குரிய இரத்தினமான முத்து மணிகளை உடலில் படும்படி அணிந்து கொள்வது மிகச் சிறப்பாகும். இதனால் மனச் சமநில உண்டாகிறது.


என்ற பெயர் ஏற்பட்டது. சித்ரா பௌர்ணமி தினம் தமிழர்களுக்கு சிறப்பு தினமாகும். இத்தினத்தில் சித்திரகுப்த பூஜை நடைபெறுகிறது.


முருகப் பெருமானின் திருக்கோயில்களுக்குச் சென்று மக்கள் வழிபாடு செய்வார்கள. பண்டையக் காலத்தில் சித்ராபௌர்ணமி தினம் இந்திரவிழாவாக அனுசரிக்கப்பட்டது. மக்கள் கடற்கரைக்குச் சென்று ஆடலும் பாடலுமாக கொண்டாடி, சிற்றுண்டிகளையும் உண்டு மகிழ்வார்கள்.


வைகாசி மாதத்தில் விசாக என்ற நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் வைசாகம் என்ற பெயர் ஏற்பட்டு ‘வைசாகம்’ என்று மருவியது. வைகாசி மாதப் பௌர்ணமி தினம் வைகாசி விசாக தினமாக அனுசரிக்கப்படுகிறது இத்தினம் முருகப் பெருமானின் அவதார தினமாக அறியப்படுகிறது. சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணை இத்தினத்தில் திறக்க,

முருகப்பெருமானின் அவதாரம் நிகழ்கிறது.


ஆனியில் அனுஷ நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் ‘ஆன்ஹி’ மாதம் என்றழைக்கப்பட்டு ‘ஆனி’ மாதம் என்று

மருவியது.


குரு பூர்ணிமா தினமாக இப்பௌர்ணமி தினம் அமைகிறது. சீடர்கள் தங்களின் குருமார்களை வழிபாடு செய்யும் தினம். வியாசபகவான் அவதரித்த தினமாகவும்

கருதப்படுகிறது. புத்த மதத்தினர் இத்தினத்தை புத்த பூர்ணிமா தினமாக அனுஷ்டிக்கிறார்கள்.


‘பூர்வ ஆஷாடம்’ நட்சத்திரம் என அழைக்கப்பட்டு பின்னர் பூராடம் என மருவிய நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் இம்மாதம் ‘ஆஷாடம்’ என்றழைக்கப்பட்டு ‘ஆடி’ என்று மருவியது.


சக்தி வழிபாடு இத்தினத்தில் மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் ஆடி மாதம் அம்மன்கோயிலில் ஒவ்வொரு

வெள்ளிக்கிழமையும் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. ஆடி மாத பௌர்ணமியை ஒட்டித் தொடரும் வெள்ளிக்கிழமை தினத்தில் வரலக்ஷ்மி பூஜை நடைபெறுகிறது.

ஆவணியில் சிரவணம் எனப்படும் ‘திருவோணம்’ நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும் இந்த சிரவண மாதமே ‘ஆவணி’ என்று தமிழில் கூறப்படுகிறது. இத்தினத்தில் உமாமகேஸ்வரி விரதம் அனுசரிக்கப்படுகிறது. ஆவணி அவிட்டத் திருநாளில் பூணூல் மாற்றும் தினமாகவும், மந்திர தீட்சை பெறும் தினமாகவும்.


குழந்தைகளை குருகுலம் அனுப்பும் தினமாகவும் அமைகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் காயத்ரி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. குருமார்கள் தங்களின் சீடர்களுக்கு மந்திர தீட்சை உபதேசம் செய்கிறார்கள்.


‘உத்திர ப்ரோஷ்டபதம்’ என்ற நட்சத்திரம் உத்திரட்டாதி ஆனது . புரட்டாசியில் இந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் ‘ப்ரோஷ்டபதி’ மாதம் என்றாகி ‘புரட்டாசி

‘என மருவியது.மகாளய பட்சம் இத்தினத்தில் ஆரம்பமாகிறது.


‘அஸ்வணி’ நட்சத்திரத்தை அசுவதி என்கிறோம். இந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் அசுவதி மாதம் ‘ஐப்பசி’ ஆனது. சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.


கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும் .எனவே இம்மாதம் ‘கார்த்திகை’ ஆயிற்று. இந்நாளில் கார்த்திகை தீபவிழா

நடைபெறுகிறது. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுகிறது.


'மார்க சீர்ஷி’ என்ற நட்சத்திரம் ‘மிருகசீரிஷம்’ ஆனது. மார்கழி மாதத்தில் இந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் ‘மார்கசீரிஷி’ மாதம் மார்கழி ஆனது. சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா மிகவும் கோலாகலமாக இத்தினத்தில் நடைபெறுகிறது.


‘தைஷ்யம்’ என்ற நட்சத்திரம் புஷ்யம் என்றாகி தமிழில் ‘பூசம்’ என்றானது. தை மாதத்தில் தைஷ்யத்தில் பௌர்ணமி வருவதால் ‘தை’ என அழைக்கப்படுகிறது.

முருகப்பெருமானை வழிபாடு செய்யும் தைப்பூசத்திருவிழா இத்தினத்தில் இடம் பெறுகிறது.


‘மாகம்’ என்ற நட்சத்திரம் மகம் ஆனது. மாசியில் இந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால், மாகம் என்பது ‘மாசி’ என மாற்றம் பெற்றது.

மாசி மகத் திருவிழா இத்தினத்தில் அனுசரிக்கப்படுகிறது. கும்பகோணத்திலும்,

பிரயாகை, அலகாபாத் போன்ற இடங்களில் திரிவேணி சங்கமங்களில் மகத் திருவிழா நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம் பெறும் மகாமகத் திருவிழாவும் மாசி மாத பௌர்ணமி தினத்தில் இடம் பெறுகிறது.


பங்குனி மாதத்தில் பூர்வ பல்குணம், உத்திர பல்குணம் என்ற இரு நட்சத்திரங்களில் பௌர்ணமி வரும். இவை பூரம் என்றும்,உத்திரம் என்றும் ழைக்கப்படுகின்றன. இந்த நட்சத்திரங்களில் பௌர்ணமி வருவதால் பல்குனி மாதம் எனப் பெயர் பெற்று ‘பங்குனி’ எனத் திரிந்தது. பங்குணி உத்திரத் திருவிழா இத்தினத்தில் கொண்டாடப்படுகிறது.


மேலும் இத்தினம் தெய்வங்களின் திருமணம் தினமாக கருதப்படுகிறது. மதுரையில் சோமசுந்தரேஸ்வரர் கோயிலில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதே போல் சீதை இராமர் திருக்கல்யாண வைபோகம், இராதா கிருஷ்ணர், திருக்கல்யாணம் விஷ்ணுக் கோயில்களில் நடைபெறுகின்றன.


コメント


  • YouTube
  • Instagram

©2023 by Thungeesam. Proudly created with Wix.com

bottom of page