top of page

வைகுண்ட ஏகாதசி

மார்கழி மாதம் வளர்பிறை 11 ஆம் நாள் வைகுண்ட ஏகாதசி தினமாக அனுசரிக்கப்படுகிறது. வைகுண்டத்தில் சொர்க்கத்தின் வாயில் கதவுகள் இத்தினத்தில் திறக்கப்படுவதாக ஐதீகம்.


விஷ்ணுவை வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு இத்தினம் மிகவும் முக்கியமான தினமாக அமைகிறது இது முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. பூலோக வைகுண்டம் என்று சிறப்பிக்கப்படும் ஸ்ரீரங்கத்தின் வடக்கு கோபுரவாயில் கதவுகள் இத்தினத்தில் திறக்கப்படுகின்றன. இந்த வாயில் வழியே உள்ளே சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்கும் இறைவனை வழிபாடு செய்வதால் பிறவியறுந்து

மோட்சத்தை அடைவர் என்பது. இத்தலத்தில் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஏகாதசிக்கு முன் பத்து நாட்களும், பின் பத்துநாட்கள் வரையிலும் விழாக்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. ஏகாதசி தினத்தில் முக்கியமாய் விரதமிருந்து இறைவழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். அடுத்தநாளான துவாதசியன்று துளசி தீர்த்தம் அருந்தியபின் சைவ உணவினை எடுத்துக் கொண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பத்மபுராணம் வைகுந்த ஏகாதசியின் சிறப்புகளைச் சொல்லியிருக்கிறது.


மகாவிஷ்ணு ஸிம்ஹாவதி என்ற குகைக்குள் சயனித்திருந்தபோது அவரை கொல்தவற்காக உள்ளே நுழைந்த முராசுரன், அவர் சயனித்திருந்த இடம் சென்று வாளை ஓங்குகிறான். அப்போது விஷ்ணுவின் உடலிலிருந்து ஒரு வெளிச்சம் மின்னலாய் வெளிப்பட்டது. அது ஆயுதம் தரித்த அழகியாய் உருவெடுத்தது. அந்த அழகியின் ஹூங்காரத்தில் முராசுரன் எரிந்து சாம்பலானான். அந்த அழகியே ஏகாதசி. கண்விழித்த விஷ்ணு, “ஏகாதசியைப் பார்த்து நீ முரனை வென்ற இந்த நாளில் உபவாசம் இருந்து என்னை வழிபடுபவர்கள் புகழையும், செல்வத்தையும் பெற்று வாழும் நிலையை அடைவதோடு, வைகுண்டத்தை அடையும் வாய்ப்பையும் பெறுவார்கள் என்று அருள்கிறார்.மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் திருப்பாவை பாடி இறைவனை வழிபாடு செய்து இறைவனுடன் ஒன்றிணைந்தார்.மேலும் பகவத் கீதையை ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு

உ பதேசித் த து ம் இத்தினத்தில்தான் என்று கூறுகின்றனர்.


Comments


  • YouTube
  • Instagram

©2023 by Thungeesam. Proudly created with Wix.com

bottom of page