top of page

ஆருத்ரா தரிசனம்

மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று ஆருத்ரா தரிசனம்

எனும் இறைதரிசனம் காணும் விழா நிகழ்கிறது. இன்று பௌர்ணமி தினமாகவும் அமைகிறது.



இத்தினத்தில் சிவபெருமான் நடராஜர் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு

அருள்பாலிக்கிறார். இத்தினத்தில் சிவத் திருத்தலங்கள் தோறும் சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. ஸ்வாமி ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். சிதம்பரத்தில் ஸ்ரீநடராஜபெருமானும், ஸ்ரீசிவகாம சுந்தரி அம்மைக்கும மகா அபிஷேகம் இத்தினத்தில் நடைபெறுகிறது. கிட்டதட்ட 4மணி நேரம் இந்த அபிஷேக பூஜை நடைபெறுகிறது. அதன் பின் ஆபரணங்கள் அலங்கரிப்பும், பின்னர் நடராஜப்பெருமானுக்கு ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதியுலா வந்தபின் நள்ளிரவு 12 மணிக்கு, நடராஜப் பெருமானும், சிவகாமசுந்தரி அம்மையும் ப க்த ர் களு க்கு ஆருத்ரா தரிசனம் காட்சி தந்தருள்கிறார்கள். அதன்பின் பஞ்சசபைக்குள் நுழைகிறார்கள். மதுரையில் சோமசுந்தரேஸ்வரர் ஆலயத்த்தில வெள்ளி சபையும், திருவேலங்காட்டில் ரத்னசபையும், திருநெல்வேலி திருத்தலத்தில் தாமிர சபையும், குற்றாலத்தில் சித்திர சபையும் அமைந்திருக்கின்றன. திருவாதிரை நட்சத்திரம் நடராஜப்பெருமானின் அவதார நட்சத்திரமாக அமைகிறபடியால் இத்தினம் மிகவும் சிறப்பான தினமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு அணுத் துகளும் நடனமாடும் நிலையில் அசைந்தாடிக் கொண்டேயிருப்பதையே சிவபெருமானின் நடராஜப் பெருமானின் திருக்கோலம் சித்தரிக்கிறது.


சிவபெருமானின் நடனம், படைத்தல், காத்தல், அழித்தல், விடுதலையடையச்செய்தல் மற்றும் மீண்டும் உயிர்பெறச் செய்தல் என்கிற

அவரது ஐந்தொழில்களைக் குறிப்பிடுகின்றன. ஒவ்வொரு தொழிலின் போது சிவபெருமான் நடனம் ஆடுகிறார். ஆனந்த தாண்டவம் தொடங்கி பிரளயம் வரையிலான தாண்டவங்களுள் 108 தாண்டவங்களை சிவபெருமான் ஆடியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. இவை பஞ்ச தாண்டவங்கள், சப்த தாண்டவங்கள் என எண்ணிக்கையின் அடிப்படையில் பல

பிரிவுகளாக குறிப்பிடப் படுகின்றன.


  • சிதம்பரம் தில்லைநடராசர் ஆலயத்தில் கனகசபையில் என்கிற பொற்சபையில் சிவபெருமான் நடராசர் கோலத்தில் அருள்புரிகிறார்.

தில்லைவனத்தில்தான் நடராசப்பெருமான் பிரதோஷகாலத்தில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், தெய்வங்களுக்கும் நந்தியின் கொம்புகளுக்கிடையில் ஆனந்த தாண்டவம் ஆடிக் காட்டினார்.


  • சிவபெருமான் மதுரை சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில், பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்கிரபாதர் முனிவரின் வேண்டுக்கோளுக்கிணங்கி, வெள்ளியம்பலத்தில் ( வெள்ளிசபை) சிதம்பரத்தில் ஆடிய ஆனந்த தாண்டவத்தை ஆடியபடி அவர்களுக்கு காட்சியருளினார். இடது காலை ஊன்றி வலது காலை உயர்த்தியபடி நடனமாடும் கோலத்தில் நடராசப்பெருமான் காட்சியருளுகிறார்.


  • இரத்தின சபை எனப் பெயர் கொண்ட திருவாலங்காட்டில், வடாரண்யேசுவரர் கோயிலில் தனது இடது காலை உயரத் தூக்கிய நிலையில் காட்சியருளுகிறார். இது ஊர்த்துவ தாண்டவம் எனப்படுகிறது.

இத்தலத்தில் காளிதேவிக்கும் நடராஜருக்கும் நடனப்போட்டி ஏற்பட்டது, நடனத்தின் போது கீழே விழுந்த தன் காதணியை நடராஜப்பெருமான் தனது இடது காலால் எடுத்து உயரத்தூக்கி நடனமாடியபடியே காதில் அணிந்து கொண்டார். காளியால் அப்படி ஆட முடியவில்லை என்பதால் நடராஜரே நடனப்போட்டியில் வெற்றிபெற்றார் என்கிறது தலபுராணம்.


  • தாமிர சபை எனப்படும் தாமிர அம்பலம் திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலில் அமைந்துள்ளது. கோயில் உட்புறம் அமைந்துள்ள இந்த சபையில் நடராசர் மற்றும் சிவகாமி அம்மன் இருவரும் அருள்பாலிக்கினற்னர். திருவாதிரை தினத்தில் இவர்களுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளை நடைபெறுகின்றன. நடராசப் பெருமான் சந்தன சபாபதி என அழைக்கப்படுகிறார்.


  • சித்ர சபை என்பது குற்றாலத்தில் எழுந்தருளியுள்ள குற்றாலநாதர் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ளது. இந்த சித்ரசபையில் மூலவர் திரிபுண்டரமூர்த்தியாக சித்திர வடிவத்திலேயே அமைந்துள்ளார். இங்கும் திருவாதிரை திருவிழா மகோற்சவமாக பத்துநாட்கள் நடைபெறுகிறது. இவ்விழாவின் போது,நடராஜப்பெருமானுக்கு தினசரி காலை மாலை தீபாராதனைக் காட்டும் போது மேலும் கீழும் நடனமாடுவது போல் காட்டுகிறார்கள்.


இக்கோயில் சங்குவடிவில் அமைந்துள்ளது. இது ஆதியில் திருமாலின் கோயிலாக இருந்ததாம். முருகனின் ஆணைப்படியே அகத்தியர் திருமாலின் தலையில் கை வைத்து அழுத்த அது சிவலிஙகமாக மாறியது என்கிறார்கள். இத்தலத்தில் இறைவனை பகலில் தேவர்களும் இரவில் அகத்தியரும் தினமும் பூஜிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

Comments


  • YouTube
  • Instagram

©2023 by Thungeesam. Proudly created with Wix.com

bottom of page