மாசி மகம்
- வில்வ மலர்
- Aug 19, 2022
- 1 min read
மாசி மகத்தன்று எந்தத் தீர்த்தத்தில் நீராடினாலும், நூறு முறை கங்கா ஸ்நானம் செய்த பலன் கிட்டும். குளம், ஆறு, ஏரி என்ற பாகுபாடு எதுவும் கிடையாது.

மாசி மக ஸ்நானம் செய்பவர்களுக்கு உரிய பலனைக் கொடுக்க ஹரியும், ஹரனும் காத்திருப்பதாக புராணங்கள் புகல்கின்றன.
அன்று நதியில் முதல் முறை மூழ்கி எழும்போது பாவங்கள் விலகும். இரண்டாம் முறை மூழ்கி எழுந்ததும் ஸ்வர்க்கப் பேறு உறுதியாகும். மூன்று முறை மூழ்கி எழுபவரின்
புண்ணியத்திற்கு ஈடான பலனாக எதைக் கொடுப்பது எனத் தெரியாமல் நானே திணறிப் போவேன்” என்று ஈசனே இதன் பெருமையைச் சொல்லியுள்ளார்.
மாசி மக நீராடலைச் செய்ய இயலாத நிலையில் இருப்பவர்கள் மாசி மக புராணத்தைப் படித்தாலும், கேட்டாலும் பலன் உண்டு.
சாபம் ஒன்றினால் கழுதை முகம் பெற்ற தேவேந்திரன், மாசி மாதம் மகம் நட்சத்திர தினத்தன்று துங்க பத்ரையில் நீராடி அந்த சாபம் நீங்கப் பெற்றான் என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்ம இராசியில் பிரவேசிக் கும் சமயம் மஹாமகம் வருகிறது.
சத்ருக்கனன் பிறந்த நட்சத்திரம் மகம். நான்காவது பிள்ளையாகப் பிறந்தாலும் தந்தையின் சிதைக்குத் தீயூட்டும் பாக்கியம் அவனுக்கே கிடைத்தது.
மாசி மாதமும், மக நட்சத்திரமும், பௌர்ணமியும் பெருமை வாய்ந்தவை.
நெல்லி மரத்தடியில் நின்று துளசிமிருத்திகையை (துளசியின் கீழிருக்கும் மண்) உடலில் பூசிக்கொண்டு திருமாலை நினைத்தபடி மாசி மகத்தன்று நீராடுபவர் சகல பாவங்களும் நீங்கப் பெறுவர்.
மாசி மாதத்தின் மகத்துவத்தை ஈசன் ஈஸ்வரிக்கும், உமை நாரதருக்கும், நாரதர் வியாசருக்கும், வியாசர் சூத முனிவருக்கும் கூறினர் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.

மகாவிஷ்ணுவே மாசி மாதத்திற்கு அதிதேவதை என்பதால் இம்மாதம் முழுவதும் திருமாலை துளசியால் அர்ச்சித்து வழிபடுவது சகல பாவங்களையும் போக்கும்.
மக நட்சத்திரத்தின் ஈர்ப்பு காரணமாக மாசி மாதத்தில் பூமியில் காந்த சக்தி அதிகரித்து, அதனால் நீர் நிலைகளில் புதிய ஊற்றுக்கள் உண்டாகி அச்சக்தி நிறைந்திருப்பதால் இம்மாதத்தில் நதிகளில் நீராடுவது ஆரோக்கிய மானது என்று விஞ்ஞானம் கூறுகிறது.
புராண காலத்தில் முனிபத்தினியர் சரஸ்வதி நதி தீரத்தில் மணலால் அம்பிகை விக்கிரகம் அமைத்து மாசி மாதத்தின் முப்பது நாட்களும் வழிபட்டு சுமங்கலி பேறு பெற்றனர் எனக் கூறப்படுகிறது.

댓글