top of page

பௌர்ணமி விரதம்

முழு நிலவு விரதம்பெணர்ணமி விரதம் இருப்பது மிகவும் சிறப்பு. விரதம் இருப்பதன் வழி மனம் ஒரு கட்டுபாட்டுக்குள் வருகிறது, மற்றும் உடலும் ஆரோக்கியம் பெறும். இதன்வழி மன உணர்வு மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச்

செல்லப்படுகிறது. ஆன்மீக அதிர்வுகள் ஏற்படுகின்றன.


விரதங்கள் மூன்று வகைப்படும் அவை...

ஏக புக்தா (மதியம் ஒரு வேளை மட்டுமே உண்ணுதல்), நக்தா விரதம் (இரவில் மட்டுமே ஒருவேளை உணவு எடுத்தல்),

உபவாசம் (முழுவதுமாக விரதம் இருந்து பழங்களை மட்டும் உண்பது) பௌர்ணமி நாளில் முழு நிலவு தென்பட்ட பின்பே உணவு உட்கொள்ள வேண்டும். பௌர்ணமியில் விரதத்தை பின்பற்றும் வழிமுறைகள் பௌர்ணமி விரதத்தை பிரம்ம முகூர்த்தத்தில் இருந்து கடைப்பிடிக்கவேண்டும்.


பிரம்ம முகூர்த்தத்தில் விழித்தெழுவதால், அந்நேரத்தில் பிராண சக்தி நம்மைச் சுற்றி வியாபித்திருப்பதால் அது நம் மன உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறதுஅந்நேரம் நாம் மேற்கொள்ளும் தியானத்தின் வழி நம் உடலிலுள்ள ஆறு சக்ராக்களை வலுப்படுத்துகிறது. நம் உடல் அணுக்கள் இதன் வழி ஆற்றல் பெறுகின்றன.பௌர்ணமி விரதம் எடுக்க விரும்பவர்கள் மட்டும் பழங்களையும் பாலையும் உண்டு விரதத்தை முடிக்கவேண்டும். பௌர்ணமி பூஜை வழிபாட்டிற்கு மணமுள்ள மலர்களான, (ரோஜா, மல்லிகை சாமந்தி) போன்ற மலர்களை வைத்து விளக்கேற்றி வழிபடலாம். இனிப்பான பாலையும், பழங்கள், பொங்கல் போன்றவற்றை பிரசாதமாக படைக்கலாம்.

வெற்றிலை பாக்கு சமர்ப்பித்து லலிதா சகஸ்ரநாமம் பாடுவது சிறந்த பலனைத் தரும். லலிதா சகஸ்ரநாமம் சொல்லும்போது அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்வது ஆன்மீக உயர்வைத் தரும். கழிபாட்டிற்கு பின் தீப தூப ஆராதனை செய்வது இறைவனின் அருளைப்

பெற்றுத்தரும்.


பௌர்ணமி விரதத்தை இல்லத்தில் கடைப்பிடிக்கும் பெண்கள் பூஜையறையில் மகாமேரு வைத்து வணங்கி வந்தபௌர்ணமி விரதத்தை இல்லத்தில் கடைப்பிடிக்கும் பெண்கள் பூஜையறையில் மகாமேரு வைத்து வணங்கி வந்தால் அதற்கு இளநீர், பால், சந்தனம் போன்றமூவகை அபிஷேகங்கள் செய்து அதை வழிபாடு செய்வது சிறப்பு. மகாலக்ஷ்மி விக்ரஹம் வைத்திருப்பவர்கள் அதற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்யலாம். காமதேனுவையும் வழிபாடு செய்யலாம். இந்த வழிபாடுகள் பெண்களுக்கு சாதகமான பலன்களை நல்கும்.


சித்தர் வழிபாடு மேற்கொள்பவர்கள் பௌர்ணமி தினத்தில் அவ்வழிபாட்டினைச் செய்வர். இத்தினத்தில் சித்தர்களின் அனுக்கிரஹம் எளிதில் கிட்டும்..பௌர்ணமி விரதமிருக்கும் பெண்கள் இத்தினத்தில் சித்தர்களை வழிபாடு செய்து வந்தால், நன்மைகள் விளையும். முத்துமாலை வைத்திருக்கும் பெண்கள் முத்துமாலைகளை இத்தினத்தில் அணிந்து கொள்வது மிகவும் சிறப்பு.

 
 
 

Comments


  • YouTube
  • Instagram

©2023 by Thungeesam. Proudly created with Wix.com

bottom of page