தை அமாவாசை
- மதிவாணண்
- Jun 20, 2022
- 1 min read
சூரியன் வடக்கு நோக்கி நகரும் உத்தராயண காலக்கட்டத்தில்
இடம் பெறும் முதல் அமாவாசை தை அமாவாசை.

சூரியனின் கதிர்கள் தேவலோகத்தில் படர்ந்து அக்கதிர்கள் புனிதமான ஆற்றலுடன் பூமியின் மீதும் படர்கிறது. பூமியின் ஆற்றலும் அதிகரிக்கிறது.
வேத ஜோதிடம் சூரியனை, ஆன்மாவின் அம்சமாக உருவகப்படுத்துகிறது. சூரியன் ஜோதிட கட்டத்தின் பத்தாவது ராசியான மகர ராசிக்குப் பெயர்ச்சியாகிறது. மகரம் கர்மாவைக் குறிக்கும் ராசியாகும். இதன் ஆட்சிக் கிரகம் கர்மகாரகனான சனிபகவான்.
இக்காலகட்டத்தில் செய்யப்படும் தர்ப்பணம் மேலுலகில் வாழும் முன்னோர்களின் மோட்சத்திற்கு பெரிதும் உதவுவதாக அமைகிறது. அவர்களுக்கு அளிக்கப்படும் படையல் பயன் தருகிறது. இந்த தை அமாவாசை காலத்தில் சூரியன் கர்மகாரகனான சனிபகவானின் வீட்டில் சஞ்சாரம் செய்வதில், முன்னோர்களின் கர்மாவினைகள் குறைகின்றன. முன்னோர்களின் ஆசி அவர்களின் பரம்பரையினருக்கு நன்மைகளை அளிக்கின்றன.
அதன்வழி, நீண்டகாலமாக வாட்டும் நோய்கள் விலகுகின்றன. செல்வத்தின் நிலையாமை அகன்று வீட்டில் செல்வம் தங்குகிறது. வேலையில் இருந்த பிரச்சனைகள் விலகுகின்றன. குழந்தைப் பாக்கியம் இல்லாத குறையும் நீங்குகிறது.
இத்தினத்தி¢ல் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதும், பசுவிற்கு அகத்திக்கீரை உண்ணத் தருவதும் மேன்மை தரும் செயல்களாகும்.
Comments